சென்னை ஆவடி – நவ -18,2023
newz – webteam
சென்னை கொரட்டுரைச் சேர்ந்த பிரவலிக்கா என்பவர் மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தை கொரட்டூர் பெரியார் நகரில் நடத்தி வருகிறார். இந்நிலையில் கொரட்டூரில் டெலிகாலிங் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் கொரட்டுரைச் சேர்ந்த குணசுந்தரி, 49 என்பவர் டெலிகாலிங் வேலையில் சேர்ந்துள்ளார்.குணசுந்தரி தான் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் தகவல்களை பராமரித்தலும் நிறுவனத்தில் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி மூலம் லோன் ஏற்பாடு செய்து தரும் வேலை செய்து வந்துள்ளார். அவ்வாறு குணசுந்தரி மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் வேலை செய்த காலத்தில் கோடம்பாக்கத்தில் தனியார் லோன் தயார் செய்து வரும் நிறுவனத்திடம் குணசுந்தரி வேலை பார்த்த நிறுவனத்தின் கஸ்டமர் தகவல்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்து கடன் தொகைக்கு ஏற்றவாறு பல லட்சங்களில் கமிஷன் தொகையை குணசுந்தரி பெற்றுள்ளார். இதனை அறிந்த மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரவலிக்கா NCRPக்கு ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். ஆவடி காவல் ஆணையாளர் சங்கர், இ.கா.ப உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் தலைமறைவு குற்றவாளி குணசுந்தரி கொரட்டூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும், மேலும் தான் பணிபுரிந்த நிறுவனத்தின் கஸ்டமர் டேட்டாபேஸ் விவரங்களை திருடி விற்று கையாடல் செய்ததும் தெரிய வந்து குணசுந்தரியை கைது செய்து பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
0 Comments