ஆவடி – ஜன -05,2024
Newz – webteam
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் சென்னை ராமபுரத்தை சார்ந்த நாரணசாமி மகன் கௌதமன், 35 என்பவர் கொடுத்த புகார் மனுவில், அதே பகுதியை சார்ந்த சுப்பிரமணியன் மகன் வேணுகோபால் மற்றும் குமணன்சாவடியை சார்ந்த செல்வம் அம்பத்தூரை சார்ந்த நித்யா மற்றும் லட்சுமி ஆகியோர் சேர்ந்து குடிசை மாற்று வாரிய வீடுகளை பெற்றுதருவதாகவும் அதற்காக அரசாங்கத்திற்கு முன் பணமாக ரூ.85,000/- செலுத்த வேண்டும் என்றும் மனுதாரர் மற்றும் 104 நபர்களிடம் மொத்தம் ரூ.88,40,000 பணத்தை பெற்றுக்கொண்டு மனுதாரர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரின் போட்டோ, கைரேகை, மற்றும் கண்விழி அடையாளங்களை எடுத்துக்கொண்டு வேனில் ஏற்றி படப்பை அருகே பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை அடையாளம் காட்டி இது உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறி, அரசு முத்திரையுடன் கூடிய போலியான ஒப்புகை சீட்டு கொடுத்து ஏமாற்றியுள்ளனர்
இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் மீது ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் IPS., உத்தரவின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து சென்னை மணலியை சார்ந்த ஜெபஸ்டின் மனைவி லட்சுமி ,என்பவரை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments