ஆவடி -மே 16,2024
Newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்தில், காவல் துறையில்பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகள்,அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு காவலர் சேமநலநிதியிலிருந்து அவர்கள் பயிலும் கல்விக்கு ஏற்ப ஒவ்வொருஆண்டும் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவித்தொகைவழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டிற்கான காவல் துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மகன் மற்றும் மகள் உயர் கல்வி பயில்வதற்கு ஏதுவாக காவலர் சேமநல நிதியில் இருந்து வழங்கப்படும் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா இன்று ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர், இ.கா.ப., தலைமையில், திருமுல்லைவாயில் S.M. நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் பயிலும் கல்வியின் அடிப்படையில், மருத்துவம்-05, பொறியியல்-17, கலை மற்றும் அறிவியல்- 43, டிப்ளோமா-01 மற்றும் இதர படிப்பை சேர்ந்த 04 மாணவ மாணவிகள் என மொத்தம் 70 நபர்களுக்கு ரூ.10,78,000/- கல்வி உதவித் தொகையை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் கலந்துக்கொண்டனர்
0 Comments