ஆவடி – ஆகஸ்ட் – 15,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (15,08,2023) 77 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கி.சங்கர், இ.கா.ப. காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் பெருமை மிகுந்த இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆவடி காவல் ஆணையராக ஆயுதப்படை காவல் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து Warrior Parade, மற்றும் Silent Parade போன்ற கவாத்துக்கள் ஆவடி ஆயுதப்படை காவலர்கலால் நடத்தப்பட்டு பொதுமக்களின் பாராட்டைப்பெற்றது.
இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்தில் பல்வேறு சமுதாய நல பணிகளை
மேற்கொண்ட (16) சமூக ஆர்வலர்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து
பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
மேலும், ஆவடி காவல் ஆணையரகத்தில் மெச்ச தகுந்த பணிகளை ஆற்றிய
சுமார் (54) காவல் உதவி ஆனையாளர்கள் முதல் காவலர்கள் வரை பாராட்டு
சான்றிதழ் உடன் கூடிய வெகுமதி கொடுத்து காவல் ஆணையாளர்
பாராட்டினார்
இந்திய சுதந்திர தினத்தின் நினைவை போற்றும் வகையில் பள்ளிக் குழந்தைகள், காவலர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் சுமார் (1000) நபர்களுக்கு காலை சிற்றுண்டி ஆவடி போலிஸ் கண்வெண்சன் சென்டரில் வழங்கப்பட்டது.
சுதந்திர தின நிகழ்ச்சியில் காவல் இனை ஆனையாளர் விஜயகுமார், இ.கா.ப., துனை ஆனையாளர்கள் செங்குன்றம், ஆவடி, மத்திய குற்றபிரிவு மற்றும் காவல் ஆளினர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், ஊர் காவல் படைபிரிவினர்க்கு போக்குவரத்து வார்டண்கள், பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
0 Comments