ஆவடி – அக் -11,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி கி.சங்கர் இ.கா.ப.,காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் அவர்களால் 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமைதோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று 11.10.2023 நடத்தப்பட்ட 138வது வாரம் குறை தீர்ப்பு முகாமில் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட 26 மனுக்கள், காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த 69 புகார் மனுக்கள், தமிழ்நாடு காவல் துறை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட 23 புகார் மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புதிய 45 மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஆவடி காவல் ஆணையாளர் தெரிவித்தார்.
0 Comments