செப் -21,2024,சென்னை
Newz -webteam
தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி-2024
தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு 2024-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளின் தகுதி சுற்றானது கடந்த 15.07.2024 முதல் 07.08.2024 வரை நான்கு காவல் மண்டலங்களில் நடத்தப்பட்டன.
இப்போட்டிக்கான தகுதி சுற்றில் 207 காவல் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், 63 அதிகாரிகள் இறுதிப் போட்டிகளுக்கு மூன்று பிரிவாக தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிகள் கடந்த 19.09.2024 மற்றும் 21.09.2024 ஆகிய இரு தேதிகளில் சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சிப் பள்ளியின் துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றன.கடந்த 19.09.2024 நாளன்று நடைபெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கான இறுதிப் போட்டிகளில் மொத்தம் 25 காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிஸ்டல்ரிவால்வர் மற்றும் இன்சாஸ் நிகழ்வில் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்விரண்டு பிரிவுகளிலும், பாதுகாப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் பணிபுரியும் துணைக் காவல் கண்காணிப்பாளர்களான துரைப்பாண்டியன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முறையே முதலாம் (தங்கம்) மற்றும் இரண்டாம் (வெள்ளி) இடத்தைப் பிடித்தனர். இதே பிரிவின் உள் வட்ட பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் துணைக் காவல் கண்காணிப்பாளர் மூன்றாம் (வெண்கலம்) இடத்தைப் பிடித்தார். பிரசன்னாமேலும், 21.09.2024-ம் நாளன்று, முதற்கட்டமாக உதவி காவல் கண்காணிப்பாளர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான அதிகாரிகளுக்கு இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 12 அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவர்களுள், தேனி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரன், இகாப முதலிடத்தையும் (தங்கம்) திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, இகாய அவர்கள் இரண்டாம் (வெள்ளி) இடத்தையும் மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், இகாப மூன்றாம் (வெண்கலம்) இடத்தையும் பெற்றனர்.அதே நாளில், இரண்டாம் கட்டமாக காவல் துறை துணைத் தலைவர் முதல் காவல்துறை இயக்குநர் வரையிலான அதிகாரிகளுக்கு இறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் 10 அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுள் காவல் துறை கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் இகாப மற்றும் காவல் துறைத் தலைவர் சுதாகர், இகாப, இருவரும் முதல் (தங்கம்) இடத்தையும் பகிர்ந்து கொண்டனர். காவல் துறை இணை ஆணையாளர் சிபி சக்கரவர்த்தி இ.காய அவர்கள் இரண்டாம் (வெள்ளி) இடத்தையும் மற்றும் காவல் துறைத் தலைவர் அன்பு, இ.கா.ப மூன்றாம் (வெண்கலம்) இடத்தையும் பெற்றனர்.
மேலும், இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இதில் அமல்ராஜ், இ.கா.ப. கூடுதல் காவல் துறை இயக்குநர், அமலாக்கப் பிரிவு, வெற்றி கோப்பையை பெற்றார்.வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு, காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், தலைவர், தமிழ்நாடு மற்றும் அமல்ராஜ் இ.கா.ப கூடுதல் காவல் துறை இயக்குநர், அமலாக்கப் பிரிவு ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.
0 Comments