மதுரை – அக் -27,2023
newz – webteam
மதுரை மாநகரில் மருதுபாண்டிய நினைவு தினததை முன்னிட்டு இன்று காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருத்தனர். அவனியாபுரம் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட சின்னடடைப்பு அருகில் மருதுபாண்டியர் நினைவு தினத்திற்கு காளையார் கோவில் சென்று வரும் வாகனங்களை தணிக்கை செய்ய அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கிங்டன் ஜேக்கப், வேலாயுதம் மற்றும் முதல்நிலை காவலர் கண்ணன் ஆகியோர் மீது மதியம் 2,மணியளவில் வலையங்குளம் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த ஆட்டோ சாலலையோரமாக பணியில் இருந்த மேற்கண்ட மூன்று காவல் ஆளினர்கள் மீது மோதியதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலாயுததிற்கு தலையில் பலத்த காயமும் மற்ற இருவருக்கும் லேசான காயமும் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த மற்ற காவலர்கள் அவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த சிறப்பு: சார்பு ஆய்வாளர் வேலாயதம் மேல்சிகிச்சைக்காக மதுரை வேலம்மான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலாயுதத்தை தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர். சட்டம் ஒழுங்கு ஆ.அருண், இ.கா.ப மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ.லோகநாதன், இ.கா.ப. அணிகளும் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்து சிகிச்கை. அளிக்கும். மருத்துவர்களை சந்தித்து தரமான சிகிச்சை அளிந்து கேட்டு
கொண்டனர்.
0 Comments