சென்னை – நவ -23,2023
newz – webteam.
தமிழகம் முழுவதும் போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழக காவல்துறை மதுவிலக்கு அமலாக்கபிரிவு பிரிவு மற்றும் போதைப்பொருள் நுன்னறிவுப்பிரிவு மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக
248 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது மற்றும் 783 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது மேலும். கடந்த 02.11.2023 முதல் 20.11.2023 வரையிலான 15 நாட்களில், போதைப்பொருள் மற்றும் மனமயக்கப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 6,பெண்கள் உட்பட மொத்தம் பேர் 248 கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 783 கி.கி. கஞ்சா, 10 கிராம், கோகோயின், MDMA எக்ஸ்டஸி, 85 டேபென்டாடோல் ஹைட்ரோகுளோரைடு மாத்திரைகள் ஆகிய ரூ.80 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக கடந்த 08.11.2023 அன்று கீழையூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நாகப்பட்டினம் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில் மத்திய உளவுப் பிரிவு, சென்னை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட சுமார் 100 கிலோ கஞ்சாவினை கடத்திவரப் பயன்படுத்தப்பட்ட லாரியுடன் வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். சென்னை, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிஐடி போலீஸார், பெங்களூருவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்த நைஜீரியாவை சேர்ந்த மார்செல் குயோ, வயது (31/2023) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிராம் கோகைன் மற்றும் MDMA, எக்ஸ்டசி போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 11 குற்றவாளிகளுக்கு தண்டனை
வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர். போதைப்பொருள் வழக்குகளில்சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் 7 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும்
மதுரை மாநகரைச் சேர்ந்த 2 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட அமலாக்கம் தவிர, மாணவர்களிடையே போதைப்பொருள்துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த 14 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டன.போதைப்பொருள் மற்றும் மனமயக்க போதைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனைமற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண். 10581 மூலம், வாட்ஸ் அப்
எண்-94984 10581 அல்லது மின்னஞ்சல் ஐடி: [email protected] மூலமும் போதைப்பொருள்விற்பனை தொடர்பான தகலவல்களை தெரிவிக்கலாம்.
0 Comments