தென்காசி – நவ -11,2024
Newz – Webteam
தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு “மக்களின் காவலன்” மற்றும் “போலீஸ் அக்கா” விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே மக்களின் காவலன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான போலீஸ் அக்கா குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
இதேபோல் இன்று குற்றாலம் பராசக்தி பள்ளிக்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
1.சட்ட மற்றும் ஒழுங்கு 2. போதை ஒழிப்பு 3.குழந்தைகள் மற்றும் பெண்கள் 4. சைபர் குற்றங்கள் மற்றும் 5.சாலை விதிகள் ஆகிய ஐந்து முக்கிய கருத்துகள் மாணவர்கள் பயன்படும்படி உருவாக்கப்பட்ட மக்களின் காவலன் மற்றும் போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தெரிய வந்தால் தங்கள் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்கா தொடர்பு எண்ணில் உடனடியாக தெரிவிக்கலாம்
என்று கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி மாணவ மாணவிகள் குற்றங்கள் நடைபெற்றாலோ அல்லது நடைபெறுவது தெரிய வந்தாலோ உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்போம் மேலும் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து முயற்சியும் எடுப்போம் என்று உறுதிமொழி ஏற்படுத்துக் கொண்டனர்.
இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் காவல் துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண் 9884042100, சைபர் கிரைம் உதவி எண் 1930, குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181 தொடர்பு கொள்ளலாம்.
0 Comments