சென்னை – டிச -15,2023
Newz – webteam
148 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது மற்றும் 886 கிலோ கஞ்சா பறிமுதல்
போதை இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த 15 நாட்களில் 20.11.2023 முதல் 13.12.2023 வரை. போதைப்பொருள் மற்றும் மனமயக்கப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட மொத்தம் 148 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 886 கிலோ கஞ்சா 1.கி.கி மெத்தருலோன் 100 டைடோஸ் மாத்திரைகள் ஆகிய ரூபாய் 91.10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 12ம்தேதி அன்று தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திரன் 23 மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபிரகாஷ் 42 ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 120 கிலோ கஞ்சா மற்றும் 1கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மண்ணடியை சேர்ந்த அப்துல் ரகுமான் இர்ஷாத் (42) மற்றும் அஜித் (எ )அஜித்குமார் ஆகிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 1 கிகி மெத்தகுலோன் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையுடன் ஆராதமும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் காவல் நிலைய சரக எல்லையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 471 கிலோ கஞ்சாவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து, குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 07 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ 100,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின்? வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. சட்ட அமலாக்கம் தவிர மாணவர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த 40 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டன. போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டு 13ம்தேதி காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும். சான்றிதழ்களும் வழங்கட்ட
போதைப்பொருள் மற்றும் மனமயக்க போதைப்பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண். 10561 மூலம் வாட்ஸ்-அப் எண் 34084.106 அல்லது மின்னஞ்சல் nibmailcom மூலமும் தெரிவிக்கலாம். மதுவிற்பனை தொடர்பான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான புகார் மற்றும் தகவல்களைப் பகிர்வதற்காக அணைத்து மாவட்டங்களிலும் ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments