தூத்துக்குடி – ஆகஸ்ட் -11,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தை போதையில்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பல இடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் நமது சமுதாயத்தில் இருந்து போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கமாகும். விளையாட்டில் எல்லைக்குட்பட்டு விதிமுறைகளை கடைபிடித்து விளையாடினால்தான் வெற்றி இலக்கை அடையமுடியும், அதுபோல நமது வாழ்க்கையிலும் நமக்கென்று விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டு அதை கடைபிடித்தால்தான் உயர்ந்த இலக்கை அடையமுடியும். ஒருமுறை ஒருவர் குற்ற சம்பவம் ஈடுபட்டு அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டால் அவர் அரசு வேலைக்கோ, தனியார் வேலைக்கோ அல்லது வெளிநாட்டில் வேலைக்கோ செல்வதற்கு பிரச்சினை ஏற்படுதுடன் தங்கள் வாழ்க்கையையும் தொலைக்க நேரிடும். கல்வி என்பது மிகப்பெரிய சொத்தாகும். மாணவர்களாகிய நீங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றொர்களின் சொல்லுக்கு கட்டுபட்டு நடந்தால் மட்டுமே வாழ்க்கையில் சிறப்பான இடத்தை மட்டுமே அடையமுடியும். மேலும் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதால் இளவயதிலேயே ஆண்மையை இழந்து வயதானவர்கள் போல உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாது அவர்களது எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகமல் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துகொண்டு எதிர்காலங்களில் சிறந்தவர்களாக வரவேண்டும். அதற்காகவே மாவட்ட காவல்துறையால் பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இளைஞர்கள் கோபத்தினால் குற்ற செயல்களில் ஈடுபட்டு அவர்களது எதிர்காலத்தையே தொலைத்து விடுகிறார்கள். கோபத்தினால் குற்ற செயலில் ஈடுபட்டு சிறை செல்பவனை விட, தனது குடும்பத்திற்காக தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்;மையான வீரன் ஆவான். கோபப்பட்டு குற்ற செயலில் ஈடுபடுவன் அவனது எதிர்காலத்தை இழப்பதோடு அவனது குடும்பமும் பாதிப்படையும். இளைஞர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வதோடு, உடற்பயிற்சியிலும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வருங்காலங்களில் சாதனையாளர்களாக வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் போதைபொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் கௌரவ் குமார் இ.ஆப, தூத்துக்குடி மநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் இ.ஆ.ப, மாவட்ட வருவாய் தலைவர் அஜய் சீனிவாசன், உதவி ஆணையர் கலால் அபுல்காசிம், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், காமராஜ் கல்லூரி முதல்வர் பூங்கொடி, காமராஜ் கல்லூரி துணை முதல்வர் முனைவர் அசோக், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராம் உட்பட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments