திருநெல்வேலி – ஆகஸ்ட் -05,2023
newz – webteam
திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் நேற்று கலை ஓவிய விழா ANAT TECHNE 23 நடத்தப்பட்டது
இவ்விழாவை கல்லூரி முதல்வர் பேராசிரியர் மருத்துவர் ரேவதி பாலன் தலைமை தாங்கி நடத்தினார். உடற்கூறுயியல் துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர் ஜெயந்தி ஞானதீபம் , இணை பேராசிரியர்கள் , துணை பேராசிரியர்கள் , உதவியாளர்கள் மற்றும் முதல் மற்றும் இரண்டாம் வருட மருத்துவமாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்
இதில் உடற்கூறியியலில் பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் உடற்கூறியியல் துறையில் கடந்த ஆண்டு நடத்திய பதக்க தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மறைந்த உடற்கூறியியல் பேராசிரியர் மருத்துவர் ஹரிஹரன் நினைவு பரிசு விருதினை கல்லூரி முதல்வர் மற்றும் .தீபா ராஜா வழங்கினர்
இதில் முதல் வருட மருத்துவ மாணவர்களுக்கு கோலப்போட்டி, நவீன கலை ஓவியம் , விளக்கப்படம் வரைதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
0 Comments