நாகப்பட்டினம் – பிப் -24,2024
Newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் மற்றும் பணிகள் பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது
24.02.2024 இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா.ப முன்னிலையில் வரவிருக்கும் 2024 பாராளுமன்ற பொது தேர்தலை பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, அதேபோல் காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து கலந்தாய்வு ஆலோசனைகள் கூட்டம் நடைபெற்றது,
மேலும் நாகை மாவட்டத்தில் பதட்டமான இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வாக்கு சாவடிகளில் பிரச்சனைக்குரிய காரணங்களை அந்தந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும், உளவு பிரிவு காவல் துறையினரும் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்
. மேலும் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக விரைந்து முடிக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்கள், மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து காவல்துறையினரும் முழு ஈடுபாடுடனும், நடுநிலைமையாகவும் செயல்பட வேண்டும் என்றும், விதியை மீறி செயல்படும் காவல்துறையினர் மீது பாரபட்சம் இன்றி துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்
. சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எழுத்தர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
0 Comments