திருநெல்வேலி – ஜீன் – 28,2025
Newz – Webteam
திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக போதை பழக்கத்திற்கு எதிராக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுறுத்தலின்படி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் ஒன்றிணைந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) Dr.V.பிரசண்ணகுமார் இ.கா.ப,, மற்றும் (தலைமையிடம்) விஜயகுமார் துவக்கி வைத்தார் விழிப்புணர்வு பேரணியில் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சுமார் 250 பேர்கள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வு பதாகைகளுடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திலிருந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மாவட்ட நூலகம் வழியாக மீண்டும் ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு செய்தனர்.


0 Comments