தென்காசி – நவ -30,2024
Newz – Webteam
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து நடத்திய மாபெரும் போதை ஒழிப்பு பேரணி
தென்காசி மாவட்டம், மருந்தியல் வார விழாவை முன்னிட்டு ஸ்ரீராம் நல்லமணி யாதவா மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து நடத்தும் மாபெரும் போதை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் போதை பொருட்களை பயன்படுத்துவது ஒரு கொடிய பழக்கம் என்றும், போதை பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் அவர்களது சிந்திக்கும் ஆற்றலை இழந்து தீயவழிக்கு செல்கின்றார்கள். இதை முற்றிலும் ஒழிக்க வருங்கால இந்தியாவின் தூண்கலான மாணவ மாணவிகளிடமிருந்து துவங்க வேண்டும் என்றும் அவர் விழிப்புணர்வை வழங்கினார். இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளுடன் தென்காசி சக்தி நகரில் இருந்து துவங்கி புதிய பேருந்து நிலையத்தில் முடிக்கப்பட்டது.
0 Comments