கோயமுத்தூர் – நவ -28,2023
newz – webteam
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் புகையிலை பொருட்களை ஒழிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது…
தமி முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின் படி கோவை மாவட்டத்தில் புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரி நாராயணன், இ.கா.ப., தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு பிரிவு மற்றும் மருந்து நிர்வாக துறையின் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர்களுடன் புகையிலைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடை செய்வதற்கும் மற்றும் விற்பவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்முறை இக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூபாய் 5000/- அபராதமும், மூன்று மாத காலத்திற்கு கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் புகையிலை பொருட்களை விற்பதில் முதல் முறை ஈடுபட்ட குற்றத்திற்கு 150 கடைகளுக்கு தலா ரூபாய் 5000 அபராதமும், இரண்டாம் முறை குற்றத்தில் ஈடுபட்ட 3 கடைகளுக்கு தலா ரூபாய் 10,000/- அபராதமும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்தில் ஈடுபட்ட 2 கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 , வாட்சப் எண் 77081-00100 மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9361638703 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
0 Comments