விழுப்புரம் -ஜீன் -18,2024
Newz -webteam
கடலோர தீவிரவாத ஊடுருவலை தடுப்பதற்கான ஒத்திகைதமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும் சாகர் கவர்ச் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம் காவல் துறை சார்பாக இன்றும் நாளையும் கடலோர பகுதிகளில் ஒத்திகை நடைபெறுகிறது.
சாகர் கவாச் ஒத்திகை தமிழக கடற்படை, கடலோர காவல் படை, தமிழக கடலோர பகுதிகளில் உள்ள காவல் துறையினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கு பெறுவர்.
இந்த ஒத்திகையில் தமிழக கடற் பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து தடுத்துதல், தாக்குதல் போன்றவற்றை முறியடிப்பதற்கான ஒத்திகை நடைபெறும். இதில் தீவிரவாத அமைப்பு போன்ற சில குழுக்களாகவும் அவர்களை தேடுதல் பணியில் ஈடுபடும் சில குழுக்களாகவும் இருந்து செயல்படுவர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சாகர் கவாச் ஒத்திகையானது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தீபக் சிவாச் IPS., மேற்பார்வையில்கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
தினகரன் தலைமையில்
உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுனில் மற்றும் 200 காவலர்கள் அடங்கிய குழு ஒத்திகையில் ஈடுபடுகின்றனர்.
மாவட்ட கடலோர எல்லை பகுதிகளான மரக்காணம், கூனிமேடு, எக்கியார் குப்பம், மண்டவாய் புது குப்பம், கோட்டகுப்பம், முட்டுக்காடு போன்ற இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் அடங்கும்.
0 Comments