அரியலூர் – மே-06,2023
newz – webteam
சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
அரியலூர் காவல்நிலைய சரகம், அண்ணாநகர் பகுதியில் 04.05.2023 அன்று இரவு அடுத்தடுத்து மூன்று கடைகளை உடைத்து திருடிவிட்டு தப்பி ஓடிய, சென்னை மாதவரம் அம்பேத்கர் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்திக்(21) என்பவரை, தகவல் கிடைத்த உடன் விரைந்து செயல்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு கையும் களவுமாக சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பிடித்தனர்.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், அவர் பல மாவட்டங்களில் பல்வேறு திருட்டு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர் என்றும், இவர் கடந்த 27.04.2013 அன்று வேலூர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பித்து வந்தவர் என்றும் தெரியவந்தது.
மேற்கண்ட எதிரியை கைது செய்ய, உதவி புரிந்து, மெச்ச தகுந்த பணி செய்தமைக்காக, ஆய்வாளர்கள் கோபிநாத், சித்ரா, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமை காவலர்கள் வடிவேலன், பாரதிராஜா, முதல் நிலைக் காவலர்கள் தர்மராஜ்,மாரிமுத்து பாஸ்கர், காவலர்கள் ஆனந்தராஜ், மோகன் மற்றும் ஊர்க்காவல்படை காவலர்கள் பிரபாகரன், ஸ்ரீராம் ஆகியோரை, 06.05.2023 இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
0 Comments