திருநெல்வேலி – அக் -16,2024
Newz -webteam
தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மு கண்ணபிரான் அவர்கள் சற்று முன் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் எவ்வித காரணம் இன்றி கைது செய்யப்பட்டார் எந்த சூழ்நிலையிலும் அரசிற்கு கண்டன எதிர்ப்பினை தெரிவிக்க தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று Dkvei Tamilnadu என்கிற facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மறுப்பு செய்தி
சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டுகள், கள்ளத் துப்பாக்கி மற்றும் அருவாள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததற்காக கண்ணபிரான் என்பவரை இன்று காவல்துறையினர் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.
0 Comments