
சென்னை – டிச -14,2023
Newz – webteam
ஐபிஎஸ் பயிற்சி முடித்த 8 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் சப் டிவிஷன்களில் ஏஎஸ்பியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்: மதுரை மாவட்டத்தில் பயிற்சியில் இருந்த கம்பம் சாமுவேல் சாமுவேல் பிரவீன் கவுதம் கன்னியாகுமரி, குளச்சல் ஏஎஸ்பியாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிற்சியில் இருந்த கெல்கர் சுப்ரமண்யா
பால்சந்திரா தூத்துக்குடி டவுன் சப் டிவிஷன் ஏஎஸ்பியாகவும், வேலூர் மாவட்டத்தில் பயிற்சியில் இருந்த டாக்டர் பிரசன்ன குமார் நாங்குநேரி சப்டிவிஷன் ஏஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்னர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் பயிற்சியில் இருந்த ஷானாஸ் தஞ்சாவூர் ஒரத்தநாடு சப்டிவிஷனுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சியில் இருந்த சிபின் திண்டுக்கல் டவுன் ஏஎஸ்பியாகவும், திருவண்ணாமலையில் பயிற்சியில் இருந்த சிவராமன் ராமநாதபுரம் ஏஎஸ்பியாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி பெற்ற உதயகுமார் ஸ்ரீபெரும்புதூர் சப் டிவிஷன் ஏஎஸ்பியாகவும், கரூர் மாவட்டத்தில் பயற்சி பெற்ற ஐபிஎஸ் அதிகாரி யாங்சென் டோமா புடியா நாகர்கோவில் சப் டிவிஷன் ஏஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments