திருநெல்வேலி – டிச -30,2024
Newz -limton
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு ஒரு மூட்டையில் 8.5 கிலோ புகையிலை பொருட்களை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்த அஸ்ஸாம் வாலிபரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அசாம் மாநிலம் நாள்பாரி பகுதியைச் சேர்ந்தவர் ரத்துல் அலி 27. இவர் சிவகாசியில் அட்டை கம்பெனியில் வேலை செய்து வருகிறார் தன்னுடன் வேலை செய்யும் பணியாளர்களுக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்வதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில் புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார் அதன் பின்னர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சாத்தூரில் இறங்கி சிவகாசிக்கு செல்ல செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி உள்ளார் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் போது சாத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் என்று உடனடியாக புறப்பட்டு விடும் ஆனால் சாத்தூர் ரயில் நிலையம் வரும்போது அசந்து தூங்கி விட்டதாக கூறப்படுகிறது இதனால் அவர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று காலை இறங்கி சாத்தூர் செல்லும் ரயிலில் ஏறி விட வேண்டும் என நினைத்து 1வது நடைமேடையில் காத்திருந்தார்.
இப்போது அங்கு சென்ற ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். இப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர் கொண்டு வந்த மூட்டையை சோதனை செய்தனர். அதில் 8.5 கிலோ போதைப்பொருட்கள் சிக்கியது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரத்துல் அலியை கைது செய்தனர். மேலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
0 Comments