ஆவடி – டிச – 11,2024
Newz – Webteam
ஆவடி காவல் ஆணையரகம்
குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் ரொக்கப்பணம் உரியவர்களிடம் வழங்கப்பட்டது
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டங்களில் உள்ள 24 காவல் நிலையங்கள் மற்றும் இணையதள குற்றப்பிரிவுகளின் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட மற்றும் களவு போன சொத்துக்களான சுமார் 162 சவரன் தங்க நகைகள், 463 கிராம் வெள்ளி பொருட்கள், ரொக்கப் பணம் சுமார் ரூ.42,47,436/-, கைபேசிகள் 487, மடிக்கணினிகள் 2, Tab 1, இருசக்கர வாகனம் -1 உள்ளிட்டவைகள் காவல்துறையினரின் துரிதமான மற்றும் சிறப்பான செயல்பாடுகளால் மீட்கப்பட்டு,
இன்று காவல் ஆணையாளர் சங்கர், இ.கா.ப., திருமுல்லைவாயில், S.M நகர், போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட சுமார் ரூ.1,81,79,476/- மதிப்புடைய சொத்துக்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக வழங்கினார்
குறிப்பாக 2024ம் வருடம் பொதுமக்களிடம் ஆன்லைன் ஷேர் ட்ரேடிங் என்ற பெயரிலும், ஆன்லைன் பார்ட் டைம் ஜாப் என்ற பெயரிலும் CBI போலீஸ் என்ற பெயரிலும் ஏமாற்றி மோசடி செய்த சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்குகளில் உள்ள பணம் ரூ.1,45,92,649/- (ஒரு கோடியே நாற்பத்து ஐந்து லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து ஆறுநூற்று நாற்பத்து ஒன்பது ரூபாய்) புகார்தாரர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு களவு போன சொத்துக்களை மீட்டு ஒப்படைத்ததற்காக, பாதிக்கப்பட்டவர்கள் பொருட்களை பெற்றுக் கொண்டு காவல்துறையினருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
0 Comments