சென்னை ஆவடி – செப் -14,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளின் வேட்டையின் தொடர்ச்சியாக 13.09.2023 இரவு ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் செங்குன்றம், ஆவடி காவல் மாவட்டங்களை சேர்ந்த தனிப்படை போலீசார் நடத்திய ரவுடிகளின் தேடுதல் வேட்டையில் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 18 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளனர். 07 ரவுடிகள் கைது
இதன் தொடர்ச்சியாக இன்று பகல் பொழுதில் ஆவடி காவல் மாவட்டம் துணை ஆணையாளர், செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர்கள் கொண்ட தனிப்படை போலீசார் ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் பிடியாணை தொடர்புடைய எதிரி நந்தா என்ற நந்தகுமார், சென்னியம்மன் கோவில் தெரு, திருவேற்காடு என்பவரை ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையாளர் சோதனை செய்து நீதி மன்றத்தில் ஆஜராகாமல் பிடியாணையில் இருந்தவரை பிடியாணையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்
கைது செய்யப்பட்ட எதிரிகளில் கொலை வழக்கில் தொடர்புடைய 07. கொலை முயற்சி வழக்கில் தொடர்புடை 05, போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய 01, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 04. மேலும் சரித்திர பதிவேடு எதிரிகள் 07 பேரை கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டனர்.
மேலும் அம்பத்தூர் காவல் நிலையம் கொலை வழக்கில் தொடர்புடை நரேஷ்பாபு, செங்குன்றம் காவல் நிலைய கொலை வழக்கில் தொடர்புடைய ரிஷி, அன்வர், ஆகியோர் நீதி மன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கைது நடவடிக்கை தொடரும் என்று ஆவடி காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
0 Comments