கடலூர் – மார்ச் -20,2025
Newz – Webteam

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த இளம்சிறுமிகள் இருவரை திட்டக்குடி விருந்தாச்சலம், வடலூர் நெய்வேலி விழுப்புரம் கோலியலூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்துவந்த புரோக்கர்கள் கட்டாயப்படுத்தி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியது சம்மந்தமாக கடந்த 2014 ம் ஆண்டு திட்டக்குடி காவல் நிலையத்தில் சுப்ரமணியம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி காவல்நிலைய குற்ற எண். 141/:2014/61 Girl Missing @ 342,363 r/w 34 IPC and 32)(b) 40) Immoral Traffic (Prohibition) act 1956. sec3 & 4 of Protection of Children from Sexual Offences act 2012 – cối ng miện செய்யப்பட்டு வழக்கின் தீவிரம் கருதி சென்னை உயர் நீதிமன்ற உத்திரவுப்படி சி.பி.சிஐடி பிரிவிற்கு கடந்த 2016ம் ஆண்டு மாற்றப்பட்டது.
இவ்வழக்கின் புலன்விசாரணையை முடித்து போக்சோ சட்டப்பிரிவின் படி கடலூர் மகிளா நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில் விசாரணையின் போது இரண்டு எதிரிகள் இறந்து விட மூன்று எதிரிகள் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 16 எதிரிகளில் இருவருக்கு 4 ஆயுள் தண்டனையும். ஒருவருக்கு 3 ஆயுள் தண்டனையும், ஆறு பேருக்கு 2 ஆயுள் தண்டணையும் ஒருவருக்கு 1.ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு 30 ஆண்டுகளும் சிறை நண்டனை விதித்து கடந்த 04.012019 ம் தேதி கடலூர் மகிளா நீதிமன்ற நீதி அரசர் அவர்களால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மேற்படி தண்டனைப் பெற்ற எதிரிகள் சிறைகாவலில் இருந்து வந்த நிலையில் கடந்து 2024 ம் ஆண்டு தலைமறைவு எதிரிகளில் ஒருவரான ஜெபினா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதன் பேரில் அவருக்கு தனியாக கனம் கடலூர் போக்சோ சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நீதிமன்ற விசாரணை நடைப்பெற்று வருகிறது.
மேலும் இவ்வழக்கில் முதன்மை குற்றவாளிகளாக இருந்து மேற்படி சிறுமிகளை கடலூரில் பல மாதங்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தும் புரோக்கர்களிடம் பணம்
பெற்றுக்கொண்டு மாற்றி மாற்றி விபச்சாரத்தொழிலுக்கு உட்படுத்திய அரியலூர் மாவட்டம்
உடையார்பாளையத்தைச் சேர்ந்த 1) சதிஷ் (எ) சதிஷ்குமார். வலது.39/25, த/பெ சேகர் மற்றும்அவரது மனைவி 2) தமிழரசி (எ) கவிதா வயது.48 ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டுமுதல் எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர்களைப் பிடிக்க
சி.பி.சிஐடி காவல்துறை தலைவர் அன்பு, சி.பிசிஐடி வடக்கு மண்டல காவல்கண்காணிப்பாளர் . சண்முகப்பிரியா அவர்களின் உத்திரிவின் பேரில்
விழுப்புரம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுகுமார் ஆகியோரின் மேற்பார்வையில்
கடலூர் சிபி.சிஐடி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் கிடைத்த தகவலின் பேரில் 18.03.2025 ம் தேதி மாலைகோவை மாவட்டம் கருமத்தப்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த
மேற்படி எதிரி (எ) சதிஷ்குமார் என்பவரை கைது செய்தும் பின்னர் கிடைத்த தகவலின் பேரில்19.03.2025 ம் தேதி காலை திருவண்ணாமலை நகரில் உள்ள வீட்டில் வேலை செய்து வந்த
மேற்படி எதிரி (2) தமிழரசி (எ) சுவிதா என்பவரை கைது செய்தும் நீதிமன்ற பிடியாணையைநிறைவேற்றி கனம் கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற த்தில் ஆஹி செய்து நீதிமன்ற காவலில்
கடலூர் மத்திய சிறையில் எதிரிகள் இருவரும் அடைக்கப்பட்டனர்.
0 Comments