திருநெல்வேலி – ஜன -09,2025
Newz -webteam
திருநெல்வேலி காவல் சரகம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி, 22 காவல் உட்கோட்டங்களுடன் இயங்கி வருகிறது.
145 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 21 மகளிர் காவல் நிலையங்கள், 12 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல் அலகுகளைக் கொண்டு, 805 காவல் அலுவலர்களையும், 7766 காவலர்களையும் ஆக மொத்தம் 8,571 பேருடன் இயங்கி வரும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காவல் சரகம் இதுவாகும்.
எதிர்கொள்ளும் சவால்கள்:
- சாதிச் சண்டைகள், பழிக்குபழியான கொலைகள், ரவுடிகளின் தாக்குதல் என பல்வேறு சட்டம் ஒழுங்குப் பிரச்சகனைகளைக் கையாள வேண்டிய இச்சரகத்தில், 52 கொலையுண்டவர்களின் நினைவு தினங்கள் ஒவ்வொறு ஆண்டும் அனுசரிக்கப்படுகின்றன.
அது தவிரவும் பசும்பொன் தேவர் குரு பூஜை, தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் தினம், பூலித்தேவன் நினைவு தினம், அழகுமுத்துக்கோன் நினைவு தினம், கட்டபொம்மன் நினைவு தினம் என பல்வேறு தலைவர்களின் 16 நினைவு/பிறந்த தினங்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகள் நடக்கும்போது சரகக் காவல் துறை முழுமையாக அனைத்து காவலர்களை ஒன்று திரட்டி அவற்றை கவனமுடன் கையாள வேண்டியிருக்கிறது. - தென்காசி மாவட்டத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும், நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் பாதுகாப்புகள் யாவும் பெருந்திரள் காவலர்களைக் கொண்டு செய்ய வேண்டியவையாக இருக்கின்றன.
இலட்சக் கணக்கான மக்கள் ஒரே நாளில் திரளும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா, திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட சரகத்தின் பல்வேறு திருவிழாக்கள், கொடை விழாக்கள் யாவும் ஆயிரக்கணக்கான காவலர்களை நியமித்து பாதுகாப்புத்தர வேண்டியவையாக உள்ளன.
சாதிச் சண்டைகளைத் தவிர்க்கும் பொருட்டும், பழிக்குப் பழி வாங்க நேரிடும் நிகழ்வுகளைக் தடுக்கும் பொருட்டும், அம்பை முதல் தொடங்கி ஏரல் வரைக்கும் தாமிரபரணி ஆற்றின் இருகரைப் பகுதிகளிலும், ஏனைய பிரச்சனைக் குரிய இடங்களிலும் ஆண்டு முழுவதும் 2477 காவல் பீட்கள் போடப்பட வேண்டிய சூழல் இருந்து வரும் சரகம் இதுவாகும்.
அதுபோலவே, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், சாதிகளின் பெயரால் மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
2024 ஆம் ஆண்டின் நற்செயல்கள்:
இத்தனை சவால்கள் நிறைந்த திருநெல்வேலி காவல் சரகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் காவல் காவல் துறையினரால் செய்யப்பட்ட நற்செயல்களாவன:சாதியக் கொலைகள், ரவுடிகள் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. - வரதட்சனை மரணம் ஏதும் நிகழவில்லை.
குறைந்துபோன குற்றங்கள்:
குற்றம்
2023
2024 குறைவு
சதவீதம்
கொலைகள்
179
176
2%
ஆதாயக் கொலைகள்
83%
கூட்டுக் கொள்ளை வழக்குகள்
40%
கொள்ளை வழக்குகள்
197
162
35
18%
SC/ST வழக்குள்
240
204
36
15%
கொலை முயற்சி வழக்குகள்
430
303
127
30%
கொடுங்காய வழக்குகள்
357
251
106
30%
சிறுகாய வழக்குகள்
2517
2168
349
அரசு அலுவலர்கள் மீதான தாக்குதல்
477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. - 4305 பேர் மீது தடுப்புச் சட்டப் பரிவுகளின்படி நடவடிக்கை.
ரவுடிப் பட்டியலில் இருக்கும் 25 பேருக்கு நீதிமன்ற கடுங்காவல் தண்டனை.
•கொலை வழக்குகளில் ஈடுபட்ட 52 பேருக்கு நீதிமன்ற தண்டனை. கடுங்காவல் - 61 போக்சோ குற்றவாளிகளுக்கு நீதிமன்ற தண்டனை.
- 316 கிலோ கஞ்சா பறிமுதல்.
•14331 கிலோ குட்கா பறிமுதல்.
குற்றத் தடுப்புக்காக 7731 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள். - பல இலட்சம் பேர் கலந்து கொண்ட குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவும், திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவும் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றியும் பொதுமக்கள் சிறப்பாக வழிபட தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு.
- சரகம் முழுவதும் நிறுவப்பட்டிருந்த 2440 விநாயகர் சிலைகளை 43 ஊர் வலங்கள் மூலம் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையுமின்றி கரைக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடு.
பசும்பொன் தேவர் குருபூஜை, தியாகி இம்மானுவேல் சேகரன் உள்ளிட்ட அனைத்து ஆண்டு தின நிகழ்வுகளில், எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடு. - மாண்புமிகு பாரத பிரதமர், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் ஆகியோர் வருகைதந்த போதெல்லாம் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு.
சிறப்பு நற்செயல்: - போதைப் பொருளுக்கு எதிராக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைப்படி “போதையில்லா தமிழ்நாடு” எனும் நற்செயல் முன்னெடுப்பு.
- கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, போதைப்பொருள் “எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்” என்ற விழிப்புணர்வு.
0 Comments