திருப்பத்தூர் – மே -30,2023
newz – webteam
காவல் நிலையங்கள், மாவட்ட மற்றும் மாநில எல்லை சோதனை சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் நகர காவல் நிலையம், திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையம், அம்பலூர் காவல் நிலையம், நாட்றம்பள்ளி காவல் நிலையம் மற்றும் மாநில எல்லையான கொத்தூர் சோதனை சாவடியையும்,லட்சுமிபுரம் எல்லையில் புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், கஞ்சா,புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
0 Comments