கோயம்புத்தூர் – ஜன -04,2024
Newz – webteam
ஆனைமலை காவல் நிலைய குடியிருப்பு கட்டிடத்தை வீடியோ காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்
கோவை மாவட்டம்,ஆனைமலை காவல் நிலைய பகுதியில் காவலர் குடியிருப்பு கட்டிடம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற காவல்துறையினர் கோரிக்கைக்கு இணங்கவும், மேற்கு மண்டல ஐஜி, கோவை சரக டிஐஜி மற்றும் கோவை மாவட்ட எஸ்பி ஆகியோர் பரிந்துரையின் பேரிலும், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரிலும், ஆனைமலை காவல் நிலைய பகுதியில் காவலர்களுக்கான குடியிருப்பு கட்டிடம் இன்று தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக. டிஜிபி வீடியோ காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments