

தூத்துக்குடி – அக் -10,2023
newz – webteam
தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு காவல்படையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினரின் ‘சாகர் கவாச்” என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று தூத்துக்குடி பழைய துறைமுகம் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிராதிகள் கடற்பகுதி மூலமாக மாவட்டத்திற்குள் அத்துமீறி நுழைவதை தடுக்கும் பொருட்டும், கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாகவும் அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் தீவீரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுறுவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஓன்றிணைந்து தடுத்து நிறுத்தி கைது செய்வது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (10.10.2023) மற்றும் நாளை 11 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் மேற்படி ‘சாகர் காவாச்” என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பழைய துறைமுகம் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி கடலோர காவல்படை காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments