கோயம்புத்தூர் – டிச-01,2023
newz – webteam
கோவை பிரபல நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை: `150-200 சவரன் நகை கொள்ளையனின் வித்தியாசமான நடவடிக்கை’ – காவல் ஆணையர் வெளியிட்ட தகவல்
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்று கண்டறியப்பட்டுள்ளது. விஜயின் மனைவி நர்மதாவுக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளது.
திருடுவதற்கு திட்டமிட்டதில் தொடங்கி எல்லா உதவிகளையும் நர்மதா செய்துள்ளார். மொத்தம் 4.6 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நர்மதாவிடம் இருந்து மூன்று கிலோ நகை மீட்கப்பட்டுள்ளது. விஜயை கைது செய்தால் மீதமுள்ள நகைகளும் மீட்கப்படும். விஜய் மீது ஏற்கெனவே அரூர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு திருட்டு வழக்குகள், கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒரு திருட்டு வழக்கு என மொத்தம் மூன்று வழக்குகள் உள்ளன.
👉நர்மதா
இந்த கொள்ளை சம்பவத்துக்கு முழுக்க முழுக்க அவர் மனைவி நர்மதா தான் காரணம். அதனால் அவரை கைது செய்துள்ளோம். இதற்கு முன்பு நர்மதா மீது எந்தவிதமான வழக்கும் இல்லை. இதுவரை விஜய் பணத்தை மட்டும் திருடியிருந்தார்.
முதல் முறையாக நகைகளை கொள்ளையடித்துள்ளார். நகைக்கடைக்குள் நுழைந்ததும் முதலில் பணம் இருக்கிறதா என்று தான் தேடியுள்ளார். டொனேஷன் பாக்ஸில் கூட பணம் தேடிவிட்டு தான், நகையை திருடியுள்ளார். விஜயை பிடிக்க தனிப்படை போலீஸ் சென்றபோது அவர் வீட்டின் ஓட்டை பிரித்து அதன் வழியாக தப்பித்துவிட்டார். தர்மபுரி போலீஸ் அவரை மற்றொரு வழக்கில் கைது செய்ய சென்றனர்.
அப்போது நர்மதா அவரை தப்பிக்க வைத்துவிட்டார். விஜயின் நண்பர் சுரேஷ் என்பவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். சிறையில் இருக்கும்போது விஜய்க்கு சுரேஷ் பழக்கமாகியுள்ளார். சம்பவம் முடிந்து வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு விஜய் அரூர் திரும்பியுள்ளார். விரைவில் அவரை கைது செய்வோம்.” என்றார்.
add
0 Comments