திருநெல்வேலி – டிச -23,2023
Newz – webteam
கணினி விழிப்புணர்வு போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற நெல்லை மாநகர காவல் துறையினர்
தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல்துறையினருக்கான அறிவு மற்றும் திறன் மேம்பாடுகள் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 67 வது மாநில காவல்துறையினருக்கான திறன் போட்டி கடந்த 20-11-2023 முதல் 24-11-2023 வரை நடைபெற்ற போட்டிகளில் கம்ப்யூட்டர் விழிப்புணர்வு பிரிவில் நெல்லை மாநகர காவல் துறையை சேர்ந்த முதல் நிலைக் காவலர் அஜித் ஆறுமுகம் என்பவர் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், கம்ப்யூட்டர் ஆட்டோமேஷன் பிரிவில் முதல் நிலைக் காவலர் பாலன் என்பவர் மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். பதக்கம் வென்ற இருவரையும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்வரி இ.கா.ப., அவர்கள் இன்று நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். உடன் காவல் ஆய்வாளர் சாம்சன் மற்றும் காவல் ஆய்வாளர் சண்முகவடிவு கலந்துகொண்டனர்.
0 Comments