வேலூர் – ஜுலை -11,2023

newz – webteam
வடக்கு மண்டல காவல் துறை தலைவர் தலைமையில் குற்றம் மற்றும் POCSO வழக்கு பற்றிய ஆலோசனைக் கூட்டம்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் Dr. கண்ணன்., IPS, அவர்களின் தலைமையிலும் வேலூர் சரக காவல் துணைத் தலைவர் முனைவர் M.S. முத்துசாமி.,IPS, முன்னிலையில் குற்றம் மற்றும் POCSO வழக்கு பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், CWC- பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments