சென்னை – அக் -30,2023
newz – webteam
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தெல்மாகரோலின் என்பவருக்கு அடையாளம் தெரியாத கைபேசி எண்ணில் இருந்து ஒரு குறுஞ் செய்தி உடன் கூடிய லிங்க் https://ippvbn.cleverappsio/” மூலம் அவருடைய India Post Payments Bank (IPPB) வங்கி கணக்குடன் பான் கார்டை அப்டேட் செய்யவேண்டும் என்றும் இல்லை என்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கபட்டிருந்தது. அதை உண்மை என்று நம்பி அந்த லிங்க்கை கிளிக் செய்து IPPB வங்கி விவரங்களையும் OTP யையும் கொடுத்துள்ளார்இதனால் அவர் IPPB வங்கி கணக்கில் இருந்து ருபாய் 25,000/அவருடைய அனுமதி இன்றி வேறு ஒருவருடைய வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து அவர் 1930-க்கு கொடுத்த புகார் மீது தலைமையக இணைய வழி குற்ற புலனாய்வு பிரிவு குற்ற எண். 3/2023 ச /பி 420 இத.ச. 66 D of IT Act இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புலன் விசாரணையில் பணத்தை் மோசடி செய்த நபர் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது.
எனவே இணைய குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார்,உத்தரவுபடி தெய்வேந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜான் மரிய ஜோசப் மற்றும் 4 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்ற்வாளியான ஜார்கன்ட மாநிலம் மார் கோடி கிராமத்தை சார்ந்த கோவிந்த் மண்டல மகன் ஆகாஷ்மண்டல் வயது (21 ) த/பெ கோவிந்த்மண்டல் என்பவரை 27ம்தேதி கைது செய்தனர் . மேலும், விசாரணையில் ஆகாஷ்மண்டல் அளிதத வாக்குமூலத்தின் அடிப்படையில் தானும் ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தை சேர்ந்த தன்னுடைய நண்பன் முகேஷ் மண்டல் என்பவரும் சேர்ந்து IPPB வாடிக்கையாளர்களை ஏமாற்ற லிங்க்ஐ குறுஞ் செய்தி மூலம் அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். மேலும் கைதுசெய்யபட்டவர்களின் கைபேசி மற்றும் சிம் கார்டு ஆகியவற்றை அவரிடம் இருந்து கைப்பற்றி .தனிப்படை போலீசார் சென்னை கொண்டுவந்தனர் .மேலும்
பொதுமக்கள், அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகதளத்தின் மூலமாக வருகின்ற லிங்குகளை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் மற்றும் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம் எனவும்
இணைய வழி குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments