திருநெல்வேலி – அக் -18,2024
Newz -webteam
திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டத்தில் பெண் காவலர்களை நியமித்து அறிவுரை வழங்கிய காவல் துணை ஆணையர்
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி, கூடுதல் காவல்துறை இயக்குநர் பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) அனிதா கண்காணிப்பில் மாநகரத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் என்று நியமிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) அனிதா அவர்கள் நியமிக்கப்பட்ட பெண் காவலர்களை நேரில் அழைத்து ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கல்லூரிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சென்று மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும் என்றும், கலந்துரையாடலின் போது மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தெரியப்படுத்தும் விதமாக போலீஸ் அக்காவின் தொலைபேசி எண் மாணவிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்
என்றும், மாணவிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் ரகசியம் காக்கப்படுவதுடன், இதுகுறித்து உடனடியாக துரித விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், போலீஸ் அக்காவிடம் மாணவிகள் எந்த தயக்கமும் இன்றி தகவல்களை தெரிவிக்கவும் காவல் துறைக்கும் மாணவிகளுக்கும் போலீஸ் அக்கா ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.
0 Comments