சென்னை -ஆகஸ்ட் -21,2024
Newz -webteam
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு LDGOT அழுத்தத்தைக் குறைப்பதற்காக பெங்களூருவில் இயங்கி வரும் NIMHANS உடன் இணைந்து 3 நாட்கள் நிறைவாழ்வு பயிற்சி (Well-being Training) அனைத்து மாவட்டம், மாநகரம், சிறப்புக் காவல் படை மற்றும் அனைத்து சிறப்பு பிரிவில் பணிபுரியும் சுமார் 106,000 காவல் ஆளிநர்களுக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டது.
மேலும் இதன் தொடர்ச்சியாக மன அழுத்த மேலாண்மை மற்றும் நிறைவாழ்வுப் பயிற்சி பெற்ற 115 காவலர்கள், 131 Private Counsellers ஆக மொத்தம் 246 பேர் உளவியல் நல வாழ்வு தொடர்பான பட்டயப் படிப்பு படிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இப்பயிற்சியில் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக 46 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றனர். மூன்றாம் கட்டமாக 20.08.2024 அன்று 69 காவல் ஆளிநர்களுக்கு 6 மாத பட்டயப்படிப்பு வழங்குவது தொடர்பாக (Orientation Programme for Online Diploma in Psychological Well Being for Master Trainers) துவக்க விழா நிகழ்ச்சி காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல்துறை தலைவர் தலைமையிடம், (பொறுப்பு) காவல் துறை தலைமை இயக்குநர் (நலன்) வினித் தேவ் வான்கேடே, இ.கா.ப., காவல்துறை துணைத்தலைவர் (நலன்), டாக்டர். M. துரை, இ.கா.ப. காவல்துறை உதவித்தலைவர் (நலன்), . P. பாலாஜி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள் மற்றும் NIMHANS நிறுவன கூடுதல் பேராசிரியர் மற்றும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். C. ஜெயக்குமார் மற்றும் உளவியல் மருத்துவர் டாக்டர்
C. இராமசுப்பிரமணியம் ஆகியோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
0 Comments