தூத்துக்குடி – டிச. – 07,2024
Newz – Webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான “Training of Trainers Workshop on Anti Drug Club” என்ற பயிற்சி வகுப்பினை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா. மூர்த்தி இ.கா.ப தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப முன்னிலையில் இன்று துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ‘போதைப்பொருள் எதிர்ப்பு குழு பயிற்சியாளர்களின் பயிற்சி பட்டறை’ ‘(Training of Trainers Workshop on Anti – Drug Club)” என்ற பயிற்சி வகுப்பு வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருணாச்சலம் மாணிக்கவேல் மஹாலில் வைத்து இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பினை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் பா. மூர்த்தி இ.கா.ப , தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப முன்னிலையில் துவக்கி வைத்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சார்பாக விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் விழிப்புணர்வை பதாகைகள் வெளியிட்டு, அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், எடிசன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் மீரா இ.கா.ப உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் எம்பவர் இந்தியா அமைப்பின் செயல் இயக்குநர் சங்கர் உட்பட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments