கன்னியாகுமரி – டிச -01,2024
Newz – Webteam


கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப் படையில் திருநெல்வேலி சரக டிஐஜி ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் மூர்த்தி IPS நேற்று 30-11-2024 ஆய்வு மேற்கொண்டர்
ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட டிஐஜி மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து நான்கு சக்கர இருசக்கர அரசு வாகனங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்கள்.
மேலும் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள மோப்பநாய் பிரிவு ஆயுத வைப்பறை,பண்டக சாலை, உடற்பயிற்சி கூடம், ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார். ஆயுதப்படை சம்பந்தப்பட்ட அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்கள் .மேலும் ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டரிந்தார்கள். மேலும் காவலர்கள் சிறப்பாக பணிபுரிய காவல்துறை துணை தலைவர் அவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்
இந்நிகழ்வின் போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS உடன் இருந்தார்
0 Comments