கோயம்புத்தூர் – ஏப்ரல் -29,2205
Newz – Webteam


கோவை மாநகர காவல் துறை நடத்திய கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற கோவை மாவட்ட ஆயுதப்படை அணியை பாராட்டிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …
கோவை மாநகர காவல் துறை ஆரம்பித்து 35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் கடந்த 26.04.2025 அன்று சரவணம்பட்டியில் CORAL JUBILEE CUP கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில் 16 பொதுமக்கள் அணியும் (Public Team), 16 காவல்துறையினர் அணி என மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடியதில் கோவை மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த கிரிக்கெட் அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றுக் கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கோவை மாவட்ட ஆயுதப்படை கிரிக்கெட் அணியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப.,மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
0 Comments