கன்னியாகுமரி – ஜன -13,2025
Newz -webteam
டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக மிரட்டி சைபர் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூன்று பேர் ராஜஸ்தானில் வைத்து கைது… கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
ஜனவரி 13,
கன்னியாகுமரி மாவட்டம்
டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி மிரட்டி ரூபாய் 70,00,000/- மற்றும் ருபாய் 26,54,047/- மோசடியாக பெற்றுக்கொண்டு தங்களை ஏமாற்றியதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இரண்டு புகார் மனுக்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
உத்தரவின் படி, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். விசாரணையில் குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்ப்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.R.சொர்ணராணி அவர்கள் தலைமையில் தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.
இந்த வழக்குகளில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த வினோத் தாஸ் என்பவரின் மகன் கிஷன் தாஸ்(19), சுலாகி தாஸ் என்பவரின் மகன் ஜிவெட் குமார்(28) மற்றும் ஜெய்சிங் என்பவரின் மகன் சுரேஷ் குமார்(31) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கன்னியாகுமரி மாவட்டம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0 Comments