

தூத்துக்குடி – ஏப் -30,2025
Newz – Webteam
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாணவர்களிடம் கலந்துரையாடி போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப இன்று மாலை தூத்துக்குடி தருவை மைதானத்திற்கு சென்று அங்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது அவர்களிடம் விளையாட்டு மற்றும் கல்வியை சிறப்பாக கற்க வேண்டும் என்றும், போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் அவற்றைத் தவிர்த்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை மதித்து நடந்து எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்தவர்களாகவும், சாதனையாளர்களாகவும் வர வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
0 Comments