நாகப்பட்டினம் – பிப் -19,2024
Newz – webteam
கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்ற பெண் காவலரை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டினார்
சசிகலா (25) த/பெ வீரபத்திரன், காரைக்கால் இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2023 ஆண்டில் பணிக்குச் சேர்ந்து தற்போது நாகை மாவட்ட ஆயுதப் படையில் காவலராக உள்ளார், இவர் சிறு வயதிலிருந்து பீச் வாலிபால் போட்டியில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்த நிலையில்
இந்திய அணிக்காக பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் தற்போது காவல்துறையில் பணிக்கு சேர்ந்தும் துறை ரீதியில் சிறப்பு அனுமதி பெற்று கர்நாடகாவில் நடைபெற்ற சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வென்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
கர்நாடகா,தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற 12 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் இவர் க இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டில் இவர் கோவா மாநிலத்தில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பெண் காவலர் சசிகலா கூறுகையில் என் மீது நம்பிக்கை வைத்து பீச் வாலிபால் போட்டியில் பங்குபெற சிறப்பு அனுமதி வழங்க அனுமதி தந்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.மேலும்
நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும்.ராஜேந்திரன் (56)- சுமதி(50) இவர்களின் மகள் ரேவதி(27) கடந்தாண்டு 2023 நடைபெற்ற உரிமையியல் நீதிபதி தேர்வில் கலந்து கொண்டு
மாநில அளவில் 18 வது இடத்தை பிடித்து நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் நாகை மாவட்டம், மஞ்சக்கண்ணி, மருதூர் வடக்கு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் ஒரு சிறிய கிராமத்தில் ,தனது தந்தைக்கு மூன்றாவது பிறந்த பெண் குழந்தை ஆவார். அடிப்படை வசதி இல்லாமல் தொடர்ந்து அரசு பள்ளியிலும், அரசு கல்லூரியிலும் படித்துவிட்டு
ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து இந்த சிறிய வயதில் குற்றவியல் நீதிபதி தேர்வுக்கு தேர்ச்சி பெற்றது எப்படி என்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஹர்ஷ் சிங் இ. கா. ப கேட்கையில், இவை அனைத்தும் எனது தந்தை ராஜேந்திரன் அளித்த ஊக்கமே காரணம் என்றும், எனது தந்தை காவல்துறையில் சேர்ந்து வாங்கிய முழு சம்பளத்தையும் எங்களுடைய படிப்பிற்காக மட்டுமே செலவழித்தாகவும்,
இந்த வெற்றியை என் தந்தைக்கு உரித்தாக்கி கொள்கிறேன் என்றும் தெரிவித்தார், மேலும் நான் பயிற்சி முடித்துவிட்டு குற்றவியல் நீதிபதி ஆனதும் எனது தந்தை போல் நேர்மையாக பணியாற்றுவேன் என்று கூறினார். மேலும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப.ரேவதி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் புத்தகங்கள் மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்
0 Comments