அரியலூர் – அக் -11,2023
newz – webteam
அரியலூர் வெடிமருந்து நிறுவனங்கள் மற்றும் வெடிக்கடை உரிமையாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்தாய்வு அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.அதனையொட்டி வெடிதொழிற்சாலைகள் மற்றும் தற்காலிக வெடிகடை நடத்துபவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிற்சாலைகள் வரைபடத்தில் உள்ளவாறு கட்டிட அமைப்பு உள்ளதா எனவும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி மட்டுமே வெடிமருந்து இருப்பு வைக்க வேண்டும் எனவும், இருப்பு வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகளின் அளவு குறித்தும் கேட்டறிந்தார். மேலும் உற்பத்தி செய்த வெடிபொருட்களை உடனடியாக குடோனில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும் எனவும், வெடிமருந்து தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தினார். மேலும், சிமெண்ட் தொழிற்சாலைகளில் உள்ள வெடி மருந்து கிடங்குகளில் பராமரிக்கும் ஊழியர்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளில் வேலை செய்ய தொழிலாளர்களை குறிப்பிட்ட
அளவு பயன்படுத்த வேண்டும் எனவும், முன் அனுபவமுள்ள தொழிலாளர்கள் வைத்து கவனமுடன் வெடி மருந்துகளை கையாள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் தீ அணைப்பான் கருவிகள் குறித்து ஆய்வு செய்து, தீ அணைப்பான் கருவிகள் உட்பட அனைத்தும் பாதுகாப்பு கருவிகளையும் முறையாக பராமரித்திடவும் அறிவுறுத்தினார். இதேபோன்று இரு சக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களையும் தொழிற்சாலைக்கு வெளி பகுதிகளில் மட்டுமே நிறுத்தவேண்டும் எனவும், உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அரசு அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் அவ்வாறு பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணிஆரி அவர்கள், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்ட உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய அதிகாரிகள், சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனத்தினர்கள், நாட்டு வெடிமருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் தற்காலிக வெடிக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments