இராணிப்பேட்டை – ஜீன் – 29,2023
newz – webteam
இராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நிதி 2021-2022 ரூ.68,11,486 மற்றும் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தால் சாலை சாலை பாதுகாப்பு நிதி ரூ.8,00,000 வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியிலிருந்து 1)போக்குவரத்து சமிக்கைகள் – 10, 2)சோலார் Blinkers – 20, 3)போக்குவரத்து ஒளிரும் கூம்புகள் – 100, 4)ஒளிரும் தடியடி விளக்குகள் – 100,5)சிறிய ஒளிரும் தடியடி விளக்குகள் – 100, 6]போக்குவரத்து பிரதிபலிப்பு முக்கோணங்கள் – 100, 7)மரம் பிரதிபலிப்பான்கள் -1000, 8) Rumble Strip 50 9)Road studs 11)Public Address System போக்குவரத்து தடுப்பாண்கள் 63,10)சோலார் போக்குவரத்து studs-30, 1,12)போக்குவரத்து தடுப்பாண்கள் – 48,13)சோலார் 18 முதலிய போக்குவரத்து உபகரணங்கள் வாங்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி., இ.கா.ப சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 10.00 மணியளவில் காவல் கண்காணிப்பாளரால் இராணிப்பேட்டை காவல் நிலைய மாவட்ட எல்லைக்குட்பட்ட சந்தமேடு நான்கு வழி சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்கைகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று மாவட்ட முழுவதும் 9 இடங்களில் போக்குவரத்து சமிக்கைகளையும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசுவேசுவரய்யா (தலைமையிடம்), காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 Comments