விழுப்புரம் – பிப் -12,2025
Newz -webteam



போலி கால் சென்டர் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஆசை வார்த்தைக்கு கூறி பொதுமக்களை மோசடி வலையத்தில் சிக்க வைத்து பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நான்கு நபர்களை விரைந்து கைது செய்த
சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன், ஆய்வாளர் ஶ்ரீபிரியா, உதவி ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . சரவணன் IPS. இன்று நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.மேலும் அதேபோல்
கடந்த 10.02.2025ஆம் தேதி அன்று இரவு திண்டிவனம் to பாண்டி ரோடு அருகே காவலர்கள் தலைமையில் வாகன தணிக்கையில் இருந்தபோது ஆட்டோவில் புதுச்சேரி மதுபானங்கள் எடுத்துச் சென்ற இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய சிறப்பு உதவி ஆய்வாளர் சோலை, தலைமை காவலர்கள் முருகன், சிவப்பிரகாசம்,முருகன், முதல் நிலைக்காவலர்கள் தருமன் மற்றும் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS. நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
0 Comments