முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்ற போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு….


தூத்துக்குடி – ஜீன் -28,2023

newz – webteam

தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவினர் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற காவல் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கடந்த 15.02.2023 முதல் 24.02.2023 வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவினர் கலந்து கொண்ட தடகள போட்டி, கபடி போட்டி, கைப்பந்து போட்டி உட்பட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கடந்த 24.02.2023 அன்று தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கபடி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் அமைச்சுப் பணியாளர்கள் மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

மேற்படி மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட காவல் அமைச்சுப்பணி அலுவலர்களை இன்றுமாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format