விழுப்புரம் – ஜன -072025
Newz – Webteam
மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற போலீசார்கடந்த 3, 4, 5 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில்கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும்
திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் வரலட்சுமி 400 மீட்டர் தடை தாண்டு ஓட்டம் மற்றும் ஐந்து கிலோ மீட்டர் நடை ஓட்டம் ஆகிய பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கமும்
விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் எழிலரசி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம்பட்டானூர் சோதனை சாவடியில் பணிபுரியும் தலைமை காவலர் .அன்பரசு நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும்
விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் பிரகாஷ் குண்டு எறிதல் போட்டியில் வெங்கலப்பதக்கமும், வட்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றனர்.பதக்கம் வென்ற காவலர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.சரவணன் IPS. நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
0 Comments