அரியலூர் – ஜீலை -21,2023
newz – webteam
மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிதியுதவி வழங்கினார்கள்
அரியலூர் மாவட்டத்தில், மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு, அவர்களுடன் பணியில் சேர்ந்த காவலர்கள், தமிழ்நாடு காவல்துறை 1997 பேட்ச் சங்கமம்-97 என்ற வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.13,51,000/- நிதி திரட்டினர். அதை சம்பந்தப்பட்ட காவலர் குடும்பத்தினருக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா முன்னிலையில் வழங்கினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மாயகிருஷ்ணன் அவர்கள், கடந்த ஜுன் மாதம் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவருக்கு மனைவி, 1மகன், 1 மகள் உள்ளனர்.
இதையடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் பணிக்கு சேர்ந்த 1997 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள், தமிழ்நாடு காவல்துறை 1997 பேட்ச் சங்கமம்-97 என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்து அதன்படி சுமார் 2685 பேர் இணைந்து, மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாயகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்திற்கு, 13 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் நிதியை திரட்டினர்.
இந்நிலையில் மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாயகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
K.பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் வழங்கப்பட்டது.
இப்பணத்தை இறந்த தலைமை காவலர்களின் பிள்ளைகளுக்கு எதிர்கால தேவைக்கு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் N.வெங்கடேசன்(SJHR)
தனிப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 1997 பேட்ச் காவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments