கன்னியாகுமரி – மார்ச் – 26,2025
Newz – Webteam


காவல்துறை அதிகாரிகள், மற்றும் ஆளிநர்களுக்கு புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த பயிற்சி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின் IPS நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் புலன் விசாரணை திறனை மேம்படுத்தி வழக்குகளை நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தரும் வகையில் புலன் விசாரணை திறமையை மேம்படுத்தும் பயிற்சியானது இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து துவங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் அதிகாரிகள் தங்கள் புலன் விசாரணை திறனை மேம்படுத்த வேண்டும் எனவும், காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற விசாரணையில் தண்டனை பெற்று தரும் அளவிற்கு புலன் விசாரணை அமைய வேண்டும் எனவும் அறிவுரைகள் கூறினார்.
இப்பயிற்சி ஒரு வார காலம் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் திறமை வாய்ந்த காவல்துறை அதிகாரிகள்,சட்ட வல்லுநர்கள், அறிவியல் நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சியில் காவல் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை கலந்துகொண்டனர்.
0 Comments