திருவாரூர் – டிச -05,2023
newz – webteam
டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகப்படுத்த மாவட்டகாவல்கண்காணிப்பாளர் . ஜெயக்குமார் உத்தரவிட்டதன் பேரில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று திருவாரூர் புகைவண்டி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திருவாரூர் மாவட்ட காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், M.Sc., நேரில் சென்று ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்
0 Comments