திருப்பத்தூர் – நவ -20,2023
newz – webteam
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திரா மாநில இளைஞரை கைது செய்து ரூபாய் 4 லட்சம் பணத்தை மீட்ட தனிப்படையினர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொக்கலம்பட்டி வேட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்தி(58), என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த மாதம் 31.10.2023 அன்று திருப்பத்தூர் SBI வங்கி கணக்கிலிருந்து சுமார் 6 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் போது லட்சுமி நகர் பகுதியில் மளிகை கடையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குச் செல்லும் போது அடையாளம் தெரியாத நபர் அவரது பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., வழிகாட்டுதலின்படி வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன்(27) என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவரிடமிருந்து சுமார் 4 லட்சம் பணத்தை மீட்கப்பட்டு அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பாக செயல்புரிந்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
0 Comments