கன்னியாகுமரி – ஜீலை -18,2023
newz – webteam
திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு உதவிய ஆட்டோ டிரைவர்……நேரில் வரவழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் பதிவான CCTV காட்சிகளைக் கொண்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரித்தனர்.
இந்நிலையில் சென்னிதோட்டம் பகுதியில் ஆட்டோ ஓட்டும் ஸ்ரீ குமார் என்பவரது மகன் வினிஷ் குமார் இரவு நேரத்தில் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோது, அக்குற்றவாளியை கண்டு காவல் நிலைய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு கூறினார். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல் நிலைய அதிகாரிகள் அக்குற்றவாளியை
கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. N.ஹரி கிரன் பிரசாத் IPS ,அவரை இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து, சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டினை தெரிவித்தார்
0 Comments